புதன், 6 நவம்பர், 2013

மன்றிலாடும் சுரத்குமார்

   


மின்னல் வீச்சு கன்னல் பேச்சு
யோகிராம் சுரத்குமார்
தென்றலோடு தேனும் பாயும்
மன்றிலாடும் சுரத்குமார்
                            (யோகிராம் சுரத்குமார்
கையில் விசிறி சிரட்டை ஏந்தி
யோகிராம் சுரத்குமார்
ககன வெளியில் நடனம் ஆடும்
யோகிராம் சுரத்குமார்
                             (யோகிராம் சுரத்குமார்

விழிகள் விரிய மலர்கள் பொழிய
யோகிராம் சுரத்குமார்
கரங்கள் அசைந்து கவிதை ஆகும்
யோகிராம் சுரத்குமார்
                             (யோகிராம் சுரத்குமார்
கையில் கயிறு சுழற்றி வரும்
யோகிராம் சுரத்குமார்
கரங்கள் தூக்கி வரங்கள் தரும்
யோகிராம் சுரத்குமார்!

                             (யோகிராம் சுரத்குமார்                   08-05-2012